கரிகாலன் தேசம் வேண்டுமடி செண்பகமே
அவன் பிறந்த தாயின் கருவறையும் வேண்டுமடி
வீரன் மூச்சு இழுத்த காற்றும் வேனுமடி செண்பகமே.
காந்தக் கண்களும் வேனுமடி செண்பகமே
பேயும் அறியா அவன் புனித வாழ்வும் வேண்டுமடி.
சாதி சமயம் இல்லா சங்கொலியில் அவன்
ஆணை வேண்டுமடி செண்பகமே,
சமனான ஆண் பெண் வரி வீரமும்
வேண்டுமடி செண்பகமே.
நிலம் தொட்டு கடல் தட்டி வான் உயர்ந்த
தமிழ் தலைவன் தோளும் வேண்டுமடி செண்பகமே,
செஞ்சோலை சிறுவர் காத்த மார்பற்ற
தாயின் பாச நெஞ்சோரம் வேண்டுமடி செண்பகமே
போரில் புறமுதுகு காட்டா புண்ணிய
முருகன் தெறி ஒளி வேண்டுமடி செண்பகமே.
பொது நலன் போதிக்கும் அந்த
புல்லாங்குழல் விரல்கள் வேண்டுமடி,
புத்தனை சாய்த்த அந்த சாந்த
சிரிப்பும் வேண்டுமடி செண்பகமே,
தாய் மண் உழுத அவன் கால்கள்
வேணுமடி செண்பகமே
தமிழ் மொழி காத்த முத்தங்கள் வேனுமடி.
மறந்துவி்டேன் கார்த்திகை பூ கொண்டு
செண்பகமே நாளை கரிகாலன் தேசத்து
காவலர்களை வணங்கிவர
தரை தொட்டு சிரமிட்டு மண்டியிடுகிறேன்
கரிகாலத் தேசம் வேணுமடி செண்பகமே
நாளை எனக்கு வேண்டுமடி
கரிகாலச் சோழனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துகள் .
ஆனையூரான்
No Comment! Be the first one.