அகஸ்தியர் ஐயா தமிழ் உள்ளவரை உம் கதைகளாக நீர் பிறப்பெடுப்பீர்

விழாமுடித்து, விடைபெற்றுச் சென்றாலும்
மணக்கோலத்தில் வலம் வருகிறது
உமது கதைகள் கச்சிதமாய்

அன்று கதை உலகின் விலா எலும்பாய் விளங்கி நின்றதால்
இன்றும் எழுத்துக்களால் உயிர்க்கும்
சாதனைதனை வெற்றிச் சிகரம் ஐயா நீர்

அனுபவத்தில் அடைந்த அனைத்தும்,
அச்சுப் பிறழாமல் கொடுத்து,
அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து,
பண்பும், பயனும் குறையாமல் நீதி
கோரியது உம் எழுத்துலகு.

ஆனையூரில் இருந்து எழுத்துகளால் ஆண்டவர் தழிழை
ஆயுதப் புரட்சியை ஆரம்பித்ததை இறக்கும்வரை வெறுத்தவர்

காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ!

இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடித் தர வந்தாயோ!

மூக்கும் இல்லை மூலியும் இல்லை ஆனாலும் அழகு சொற்கள் நீர் தந்த கதைமருந்து

இருண்டு விட்ட காகிதம் கூட உன்னால் இலேசான வெளிச்சம் பெற்றது!

பிறந்த ஆனையூரில் மட்டும் வெளிச்சம் தர மறுத்தார் யாரோ

நீர் விண்ணில் இருந்து தமிழ்தாயின்
கைநழுவிய பேனா
என் நாள் உன் புகழ் எட்டும் முட்டும் வானை ஐயா

உங்கள் ஆன்மா இழைப்பாறுக .

ஆனையூரான்