உலகமெல்லாம் அடக்கியாளும்
ஆண்களையும் மிரள வைக்கும்மந்திரம்
உண்டு பெண் இங்கே…
பட்டாம் பூச்சியாய் பவனி வரும் பெதும்பை
கடக்க தடை பல தரணியிலே..
நிறம் கண்டு குறை சொல்வார் பெண்ணின் குணம் பற்றி அறிவதில்லை…
இரத்த பந்தம் விட்டு பிரிந்து புதிய சொந்தம்
தனில் இணைந்த பின்புஇயந்திரமாய்
உழல்வதென்ன.?
விருப்பமின்றி வந்ததனைத்தையும்
வருத்தமின்றி வாரியனணக்கும் வள்ளல்
அன்றோ வஞ்சியவள்?
பசி தூக்கம் துறந்து பகல் இரவு மறந்து
பம்பரமாய் சுழன்று பரிமளிக்கும்
பாவையவள்
மனம் குளிர பரிசு வேண்டாம்.
பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க
ஊக்கவித்தல் ஒன்றே போதும்
No Comment! Be the first one.