குறை கூறும் யாராலும் உன் வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ இயலாது

உன் வாழ்க்கையை குறை கூறும் யாராலும் உன் வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ இயலாது. எனவே அடுத்தவர் வாழ்வை நீயும் குறை கூறாதே!
அனுதாபத்திலோ அல்லது உணர்ச்சி வேகத்திலோ முடிவும் எடுக்காதே உதவியும் செய்யாதே இரண்டையும் நினைத்து ஒரு நாள் நிச்சயம் வருந்துவாய்.
சின்னச் சின்ன சந்தோசங்களை அப்போதே அனுபவித்து விடு. பின்னாளில் நீ தேடினாலும் அது கிடைப்பது அரிது.
யாரைப் பற்றியும் புறம் பேசாதே உன்னைப் பற்றியும் பேச சிலர் இருப்பார்கள்
வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமித்துக் கொள். உன் சம்பளத்தை விட சேமிப்பு உன்னை காத்திடும்.
கையில் பணமிருக்கும் போது ஆடிடாதே. ஆடினால் அசதியில் ஒருநாள் தள்ளாடி விழுவாய்.
உனக்கு ஒன்று நிகழவில்லை என எப்போதும் வருத்தம் கொள்ளாதே! அதைவிட சிறப்பான ஒன்று உனக்காக காத்திருக்கும்.
கோபத்தைக் காட்டிடக்கூட காலம் தாழ்த்து ஆனால் அன்பைக் காட்டிட நொடிப் பொழுதையும் தாமதிக்காதே!
உனக்கு எளிதாகக் கிடைக்கும் ஒன்று உன்னைப் போன்ற ஒருவனுக்கு பல போராட்டங்களுக்குப் பின்னே கிடைக்கும். எனவே கிடைப்பவற்றை மதித்துப் பழகு.
இதுபோல இன்னும் பலவற்றை வாழ்க்கை நொடிக்கு நொடி கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்
.