மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்

மகான் போல வாழ
வேண்டும் என்று
அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!
வாழ்க்கை மிகவும்
சுவாரசியமானது..!
இன்று நீங்கள்
அனுபவிக்கும் மிகப்
பெரும் வலிகளே
நாளை உங்களின்
மிகப் பெரும் பலமாக
மாறிவிடுகின்றது..!
முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..!
இன்பம் வரும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!
கடுமையான
கஞ்சத்தனம்,
தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை
ஆகிய மூன்றும்
மனிதனை
வீணாக்கி விடும்..!
எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!