உன்னை நீயே
செதுக்கிக் கொள்
உளியால் அல்ல..
அவமானங்களால்
அவமானம்!!
கூர்மையானது.
அவமானங்களை
சேகரித்து வை
உன்னை அவமானம்
செய்தவர்களுக்கு
அன்பளிப்பாக கொடுக்க!!
அவமானம் மட்டுமே
ஒருவனை அடுத்த
நிலைக்கு எடுத்துச்
செல்லும். அவமானங்கள்
மட்டுமே ஒருவனை
அறிவாளியாக மாற்றும்!!
வாழ்க்கையில் தடுமாறி
விழுந்தவனுக்கு ஆறுதல்
கூறாவிட்டாலும் அவமானம்
செய்யாதே..!
நாளை
நீயும் தடுமாறலாம்..
தடம்மாறலாம்..!
மற்றவர்கள் நம்மை
அவமானப்படுத்தும்
போது அந்த நொடியில்
வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில்
இருந்து தான் நம்
வாழ்க்கை ஆரம்பமாகின்றது!!
தன்னைத் தானே சரி
செய்து கொள்ளுங்கள்
அதை விட சிறந்த மாற்றம்
உலகில் எதுவுமில்லை!!
வாழ்க்கையை வாழ்வதில்
சிறு மழலை போல் இரு
அதற்கு அவமானம்
தெரியாது; விழுந்தவுடன்
அழுது முடித்து
திரும்பவும் எழுந்து
நடக்கும்!!
வாசித்த நீங்கள்
புருவம் உயரும்
நேரத்தில் புரிந்து
கொண்டேன் இனியும்
புறம் காட்டி ஓடினால்
எனக்கு அவமானம்
என்று..!