தேடியே அலைய வேண்டாம்
தேவையை சொல்ல வேண்டாம்
ஓடியே களைக்க வேண்டாம்
உளந்தனும் மலைக்க வேண்டாம்!
பாடியும் அழைக்க வேண்டாம்
படையலும் போட வேண்டாம்
கூடியே பஜனை செய்து
கூப்பிட்டு அலுக்க வேண்டாம்!
உள்ளத்தைத் தெளிவு செய்து
உணர்வினால் உருகி நின்று
மெல்லத்தான் அழைத்தால் போதும்
மேரியும் வந்து நிற்பாள்!
அன்னையைக் கண்டு நெஞ்ச
அறைதனில் உள்ள வற்றை
கண்ணுற காட்டு மெய்யால்
கருணயாம் மேரி மாதா
கண்ணிமை நேரம் முன்னே!
ஆனையூரான்
No Comment! Be the first one.