அரிய செயல்கள் அனைத்தும்
விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன ;
வெறும் வலிமையால் மட்டும் அல்ல
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு ,
எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும் , முட்கள் அல்ல
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ
அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு .
உனது துணிவிலேயே அறிவும் , ஆற்றலும் , மந்திரமும் அடங்கியுள்ளன .
என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன் .
என் தவறை மற்றவர்களிடம் தயங்காமல் கூறுபவன் துரோகி .
நன்றாக பழகும் அனைவரும் நம் நண்பர்கள்
இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும் ,
சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம் !
தோல்வியும் துன்பமும் தனியே வருவதில்லை .
கூடவே வலிமையையும் அழைத்து வருகிறது
செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது ,
வேகமாக ஓடுவதால் என்ன பலன் ?
கோடிக்கணக்கான கற்பனைகள் லட்சக்கணக்கான
முயற்சிகள் ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒரு சில
நிஜங்களுடன் நாம் வாழ்கிற நிஜத்துக்கு பெயர்தான் வாழ்க்கை
அப்பாவிடம் மகன் கற்றுக்கொள்கிறான்
முதுமையில் மகனிடம் அப்பா கற்றுக்கொள்கிறார்
இப்போது அப்பா மகனுக்கு ஹீறோ
முதுமையில் மகன் அப்பாவுக்கு ஹீறோ
No Comment! Be the first one.