நாக்கு கொடிய மிருகம்
ஒருமுறை அவிழ்த்து விட்டால்
கட்டுவது கடினம்!!
தீய செயல் குறித்து தெய்வத்தின்
முன்னால் வெட்கப்படாதே!
மனிதன் முன்பாக வெட்கப்படு!!
மறக்க வேண்டியவைகளை
மறக்காமல் நினைத்திருப்பதும்!
மறக்க வேண்டாதவகைகளை
மறந்துவிடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய
துன்பங்களுக்கு காரணம்!!
உன் அனுமதி இல்லாமல்
உன்னை தொடுவேன்,
உன் கண்ணீரை
துடைக்க மட்டும் மகிழ்ச்சி !!
கணவன் சோம்பேறி பாதி வீடு எரியும்!
மனைவி சோம்பேறி முழு வீடும்
எரிந்து கொண்டிருக்கும்!!
யாருடைய குறைகளை எண்ணி
விட முடியுமோ
அவரே உண்மையில்
உயர்ந்த மனிதர்!!
மணிக்கணக்கில் உபதேசம்
செய்வதை விட!
ஒரு கணப்பொழுதாயினும்
உதவி செய்வது மேல்!!
அருகில் இருக்கும்போது
கோபுரங்கள் கூட
உயரமாகத் தெரிவதில்லை!
தூரத்தில் இருக்கும்போதே
பிரமாண்டமாகத் தெரிகின்றன!!
No Comment! Be the first one.