இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை.

இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை.
• சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்
• சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.
• சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.
• சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.
• சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.
இப்படி ஏங்கி ஏங்கியே சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா🪝
• பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.
• ஏழையோ பணமே தம்மிடம் இல்லை என்று பணத்தை தேடி ஓடுகிறான்…
வாழ்கை என்பது பணமா🚦
• சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர். வாழ்க்கை என்பது சாதனை செய்வதா🚦
• சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி, அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர். வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தான🚦
• சிலர் மீது நம்பிக்கை வைத்தே ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா🚦
• சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து கண்ணீர் விடுகின்றோம். வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா🚦
• இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர். வாழ்க்கை என்பது பாடம் கற்பதா?
• சிலர் கனவுகளை துரத்தி செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தான🚦
ஓடி ஆடி முடித்த பின்பு இங்கு ஓய்வெடுக்க மிஞ்சுவது கல்லறையே !!
• இருபதிலும் வாழ்க்கையை தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையை பெற்றவரும் உண்டு…
கல்லறையிலும் இங்கு புதைந்த வாழ்க்கையை தேடுபவர் யாரோ !!