அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட
ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்.
அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும்,
அழுக்காகவும் உடுத்தக்கூடாது.
அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம்
அறிய மனமில்லாமை.
தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது
ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்
அன்பு நிறைந்த இன்சொல்,
இரும்புக் கதவைக்கூடத் திறக்கும்.
மரங்களில் இலைகள் துளிர்த்தல் போல்
கவிதை பிறக்க வேண்டும்.
அனுமதியில்லாத இடத்தில்
இன்பம் இருக்க முடியாது.
பொறுமை கசக்கும்; ஆனால் அதன்
மூலம் கிடைக்கும் பலன் இனிக்கும்.
மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி,
சமுதாய முன்னேற்றத்தின்
கருவியாகவும் இருக்க வேண்டும்.
No Comment! Be the first one.