அமரர் பேரின்ப நாயகம் அவர்களின் நினைவாக

தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் உயிரே .
சேவகன் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே.
நீ அசைந்தால் ஊரே அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்ந்தவரே.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆனையூர் மூத்த தலைமகனே பேரின்பா
அர்ப்பணிப்பில் குளித்தெழுந்த நாயகமே!
ஆனையூர் இளைஞர்களின் முகவரியே தலைவா!
ஊருக்கே தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே!
அன்னையின் சாயலில் வார்த்தெடுத்த புத்திரனே!
எங்கள் ஆனையூர் சமுத்திரமே!
ஆயுதப்புரட்சியெலாம் அன்றும் அகிலத் தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
சேவை புரட்சியால்தான் கணக்கிலா மாற்றம் காண்கின்றோம் கண்கூடாய்
இன்று நீ வாழ்க உம் பணி நாம் தொடர்வோம்
யாழ் புரலவன் ஆனையூரான்