
அன்னையின் ஊருக்கே ஆசிரியை நீ
பணிவில் பாருக்கு நிகரானவர்
மறை அறிவித்த மா மேதை மிஞ்சியவள்
வறுமையில் நோயுற்றோருக்கும் மருத்துவச்சி
அப்பு ,ராசாத்தி என்ற வார்த்தையின் அகராதி
ஆலயத்தில் இளைஞர் பக்கம் அமர்ந்து வழிநடத்தும் அரியாதை
பூச் சேர்ந்த வெள்ளை சேலையோடு பூசைதவறாத புனிதை
உன் சிவப்பு மை பேனாக்கள் பலர் தலையெழுத்தை திருத்திய பிரமாஸ்திரம்
அன்று அடைக்கலநாயகி வீதியில் நகரும் உயிர்பெற்ற தேர் ஆச்சி
அன்பு தூண்டுகோல்களுக்கு
அகரம் சொல்லித்தந்த சிகரம்
நேசத் துளிகளை அள்ளிவந்து
ஆலயமெங்கும் புதுமை செய்யும்
தாய்யம்மா
துடிக்கும் ஆனையூர் இதய சுவற்றில் உன் படம் தொங்குகிறது
காலப்பெருவெளியில் கரைந்து போகும் சுவடு இல்லை நீ
நிச்சயம் மோட்ச வீட்டில் அமர்திருப்பாய்
தமிழீழமும் உன் பணி மறக்காது
ஆச்சி நீ மேய்த்த மந்தையில் ஒன்று
ஏற்றம் பெற்ற என் எழுத்தாணி
எங்கிருந்தாலும் எட்டிப் பார்க்கிறது இன்று உன்பாதம்
தமிழ் புரவலன் ஆனையூரான்