உலக அழிவின் உச்சம்
உணருதல் நன்றிதை உணர்வீர்
நிலவும் மனித குணத்தால்
நிச்சய மழியும் பூமி
பலவும் பெற்ற இயற்கைப்
பலனில் கேடு யென்றால்
பாழ்படும் உலகை பரமன்
படை கொண்டொடுக்க இயலா
காடு களழியும் நிலையில்
கடைத்தேற் றொருவர் இல்லை
வீடுகள் தோறும் மாசை
விலக்கிட ஒருவரு மில்லை!
கூடும் வெப்ப முணர்ந்து
குறைத்திட எவரு மில்லை
ஆடும் மனித ஆட்டம்
அடங்க நெருங்குது எல்லை
No Comment! Be the first one.