தாய்!
தொட்டுத் தூக்கி தோளில் போட்டு
தட்டித் தூங்க வைப்பாள்
கட்டுப் பட்டு கண்கள் மூட
கானம் தானிசைப்பாள்
எட்டு மட்டும் இவளின் பாட்டு
முட்டும் செவிகளதை
சிட்டுக் கூட வட்ட மடிக்கும்
செந்தமிழ் தேன்பருக!
உறங்கும் பிள்ளை உயிரில் நனைந்து
உள்ளம் மகிழ்ந் திருப்பாள்
கிறங்கும் விழியிடம் கெஞ்சி கெஞ்சி
கீழே தலை சாய்க்காள்
தனக்கென வாழா தானும் வாழ்வாள்
தவமே தானி ருப்பாள்
தன்னுயிர் மகவென தன்னை யழித்தே
தாய்தான் நமைக் காப்பாள்
No Comment! Be the first one.