தமிழை வளர்ப்பதாய் தம்பட்ட மடிப்பவன்
தன்னலம் மிக்கவன் ஆவான்
தமிழென்ன புல்லா தாயில்லா மகவா
தமிழழிப்போன் தானே சாவான்!
அப்பட்ட பொய்தனை அடுக்கும் வகைதனில்
அள்ளித் தெளிப்பது வேண்டாம்
எப்படி யானவோர் இக்கட்டும் பார்த்தவள்
என்னரும் தமிழே யாண்டும்!
கோடான கோடி கோடிக் கணக்கினை
கூடியத் தமிழக்கு நிகரு
ஈடாக ஒன்றது இருக்குது என்றெனில்
என்றனுக் கிங்கே பகரு!
வெட்டத் துளிர்பெறும் விரிவாழை யென்தமிழ்
நட்டது சிவன் சபையாகும்!
அட்டமா சக்தியும் ஆளும் திறனதும்
அன்னைத் தமிழுயிர் ஆகும்
No Comment! Be the first one.