பசிபிணி மூப்பென்று படைப்புக்கு விதிதன்னை
ருசியென்று கொடுத்தவை வசிக்கின்ற பெரும்பூமி
புசிக்கவும் புலரும் பிணி நீக்கவும்
போதிய வழியிருக்க போதாதே மூப்பைப்
போக்கிடவே ஒருவழியும்!
பிறவிப் பயனுற்று பின்னொரு நாளமைதியுற
உறவறுக்கும் உத்ததமமே உண்டான மரணமது
துறவி யெனத் தூரத்தே ஒளிந்தாலும்
தொடரும் மரணமுனை தொட்டேதான்பின் விலகும்!
கர்மவினை காட்டும் காயஉயிர் விளையாட்டில்
கண்டதிலை வெற்றியது காசினியில் ஓருயிரும்
வர்மக்கலை கொண்டு வாழுகின்ற மேனிக்கு
சருமம் ஒன்றுதான் சத்தியமமாய் போர்வையுமே!
உண்டான உயிர் உடல் பேரியக்கம்
கொண்டாலும் மணிதனவன்
திண்டாடும் போதெலாம்
கண்டுறையும் ஆலயம் கருணை வழியுமிடம்
இன்றுவரை மாதாவே இருக்கின்றாள் அவ்விடமாய்!
ஆனையூரான்
No Comment! Be the first one.