நீ பிறந்தது எனது பாக்கியம் அம்மா
உன் வயிற்றில் நான் வந்தேன்..
இந்நாளைக் கொண்டாடும் உரிமை
உனைவிட எனக்கதிகம் அம்மா..
இதயம் அற்ற உயிராய்
உன் கருவறையில் துடித்து கொண்டிருந்தேன்..
உன்னிடம் இதயம் எங்கே என கேட்போரிடம்..
கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது
ஆனையூரான் என சொல்லி மகிழ்ந்தாயோ
மூச்சடக்கி பிரசவித்தாய் என்னை
மூச்சுள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.
கருவறையில் சுமந்த என்னை
கருவிழியில் வைத்து காத்தாய்.
எண்ணற்ற ஏக்கங்கள் என்னுள்
அருவியாய் ஓடும் போதெல்லாம்..
மவுனமாய் அணை கட்டி என்னுள்
இன்பம் பொங்க செய்தாய்..!
அகவை நல் வாழ்த்துக்கள்
No Comment! Be the first one.