உன்நினைவு என்னகத்தில் உடும்புப்பிடி–அது
கன்னகத்தில் இரவு தோறும்
கனவுக்கொடி!
கண்ணசைக்க கண்ணாடிபோல் சிதறுதடி –இதயம்
காலந்தோறும் காதலினால் பதறுதடி!
சம்மதத்தை சொன்னாலேது குறையுமடி-நீ
சம்மதித்தால் சரியலாமே உந்தன்மடி!
அம் மனத்தை விரும்பிடுறேன் சொல்லிடடி–இந்த
அம்மான் மகன் தவிப்பதனை
அறிந்திடடி!
ஒன்றிநீயும் உள்ளத்திலே கரைந்திடடி–என்
உயிர்க்கரையும் காட்சியதை கண்டிடடி!
அன்றில்போல அமைத்திடுவோம் அன்புகுடில்–அது
இன்றுநாளை என்றில் லாது
இலங்கும் என்று மெழில்!
No Comment! Be the first one.