உள்ளம் தெளிவுற்றால் உயர்வாகும் சிந்தனைகள்
உயர்வான சிந்தனைகள் உலகுக்கே வழி காட்டும்
நல்லவை விளைவே ஞானத்தைக் கொண்டுவரும்
ஞானத்தால் ஞாலம் நாளும் செழிப்பேறும்!
கள்ளம் மறையும் கண்ணியமும் தலைதூக்கும்
வல்லாத செயலெல்லாம் வலுவிழந்து போய்விடும்
எல்லோர்க்கும் எல்லாமும் என்றநிலை வந்துவிட
இல்லாதத் திண்டாட்டம் இல்லாது போயொழியும்!
பொல்லாத பூமியென்று பொய்யுரைத்த கதைகளும்
சொல்ல இயலாது சொன்னாலும் பலிக்காது
கொள்ளும் எண்ணத்தில் குறைநஞ்சு கலந்தாலும்
எல்லாம் வீண்தானே ஈதறிந்தால் தெளிவலவோ!
No Comment! Be the first one.