காதல் பெயரால் கடற்கரை கூடி கண்ணிய மற்ற காரியம் செய்து
புலனொடு புலன் புணர்வது காதலிலை
அளவீ டென்றொரு அளவெதும் அதற்குயிலை
களவினில் காமம் கரைவது காதலிலை
கண்டதும் காதல் கணக்கது மெய்யுமிலை!
உடற் சோர்நிலையில் ஒதுங்குதல் காதலிலை
கடமை யென்ற கருத்திலும் காதலிலை
இடம் பொருள் நோக்கும்
இடத்திலும் காத லில்லை
இன்பம் ஒன்றே இலக்கிலும் காதலிலை!
பண்பட மனத்தடி பதியும் அன்பே
பண்டை தொட்டு பகரும் காதல்
கண்படும் வண்ணம் கலந்து வத்தல்
காலாக் கால கண்ணியக் காதல்!
இருபால் கூடி ஒருபால் ஆகி
இன்பத் துன்ப நிலை பாடாகி
வருமெச் சுமையையும் வழி யோட்டுதலே
வாழ்வியல் சொல்லும் வளமார் காதல்!
காதல் பெயரால் கடற்கரை கூடி
கண்ணிய மற்ற காரியம் செய்து
மோதல் முறைகேடு முற்றிக் கொலையில்
போதும் போதும் பொல்லாக் காதல்!
இனியெனூம் காதலை இலக்குப் படுத்தி
இருமனப் புனிதம் இழக்கா வண்ணம்
கனிவுடன் காதல் கலை யெழிலாக
காதல் செய்வீர் காதலும் வாழ!
No Comment! Be the first one.