அளவை மறந்து அலைவாய் எனிலோ
அதுதான் உனக்கு பின்னேற்றம்!
உலகைப் புரிந்து உவப்புடன் வாழ
உலக மறையோர் ஆதாரம்
பலவும் கற்று பயனடை உனக்கு
பலனில் இல்லை சேதாரம்!
அளவில் அணுவும் அகலா வண்ணம்
அளவிட லுனக்கு முன்னேற்றம்
அளவை மறந்து அலைவாய் எனிலோ
அதுதான் உனக்கு பின்னேற்றம்!
வாழ்வின் சூட்சுமம் வாழும் முறையில்
வழியை மறந்தால் என்னாகும்?
வாழ்ந்த வாழ்வின் வடுவே மிஞ்சும்
வருவோர்க் கதுவும் நஞ்சாகும்!
பொருளுடை வாழ்வில் பொருள் பெரிதல்ல
புரிந்து வாழல் பேரின்பம்
புரியா வாழ்ந்து புதைந்து போதலில்
புலப்படு மனைத்தும் சிற்றின்பம்!
No Comment! Be the first one.