ஊருலகு குடிகொண்டாள் மாதா வாக
உண்மைநிலை கன்னிமேரி உமையா லிங்கு!
ஐம்புலனில் ஆர்ப்பரிக்கும் சக்தி அன்பு
மெய்புலர மேதினியில் விழித்தக் கோலம்
நம்புவரின் உள்ளத்தை நத்தும் கையே
நாடுவர்க்கு நலமூட்டும் நலிவே இல்லை!
அச்சாணி உலகுக்கே புரிந்த உண்மை
அணுகுங்கால் யாவருக்கும் அதிச யந்தான்
உச்சார்ந்த நிலையென்றும் உனக்குப் பக்கம்
உடன் வந்து நிற்பதுண்டு காவலாக!
பேருண்மை விளங்குவர்க்கு பேறு உண்டு
பிறவுலகு பிறப் பொக்க விளங்குதற்கு
ஊருலகு குடிகொண்டாள் மாதா வாக
உண்மைநிலை கன்னிமேரி உமையா லிங்கு!
சீருலகு சிறப்பொக்க ஜீவன் வாழ
சீர்திருத்தி செம்மையினை செய்யும் தாயார்
பாருலகில் படைத்தவையை காக்க வேண்டி
பலவிடத்தும் அமர்ந்திட்டாள் பார்வைக் கேற்ப
No Comment! Be the first one.