நிறைய துன்பங்களை
சுமந்தாலும் புன்னகைக்க
மறந்து விடாதீர்கள்.
இந்த உலகம் உன்
முயற்சிகளை கவனிக்காது..
முடிவுகளை தான் கவனிக்கும்..
சிந்தித்து செயல்படு..!
உன் குணத்தைப் பற்றி
சொல்ல ஆள் இல்லை..
குறை சொல்ல ஊரே உள்ளது.
இங்கு தடுமாற்றம் இல்லாமல்
செய்யும் தவறுகள் எல்லாம்
தவறு என்ற கணக்கில் சேராது..
அதன் பெயர் சாமர்த்தியம்.
புதிதாய் புண்ணியத்தை
தேடுவதை விட்டுவிட்டு,
செய்த தவறுகளை சரி செய்து
பாவத்தை துடைத்தெறியுங்கள்.
முட்களையும் ரசிக்க
கற்றுக் கொள்..
வலிகளும்
மறந்து போகும்.
கையேந்தி நிற்கும் மனிதனை
விடுத்து கல்லாக நிற்கும்
கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான்
மனிதன் பணத்தையும் பாசத்தையும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு
நொடியும் மகிழ்ச்சியாக வாழுங்கள்..
ஏனெனில் வாழ்க்கை நமக்கு
மறுவாய்ப்பு தரப்போவதில்லை.
No Comment! Be the first one.