சென்றுவா 2023 ஆண்டே
அனைத்தும் தந்தாய்
நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம்,
குறை சொல்லியே வாழ்கின்றோம்,
ஏமாற்றத்துடன் இறக்கின்றோம்.
பணம் முட்டாளுக்குக் கூட அறிவாளி
நண்பனை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
நல்ல வழிகாட்டுதலாக மாறாதவரை
தண்டனை என்பது மதிப்பற்றதே.
எளிமையானதாக மாறுவதற்கு முன்
அனைத்து விடயங்களும் கடினமானதே.
குணத்தில் மிக உயர்ந்தவனும்,
குணத்தில் அடிமட்டத்தில் இருப்பவனும்
ஒருபோதும் மாறவே மாட்டார்கள்.
உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில்
சக்திமிக்க மனிதர்களாகத் திகழ்வர்.
ஒரு செம்மறியாடு ஓநாயிடம்
சமாதானம் பேசுவது
பைத்தியக்கார செயல்.
நினைவில் வைத்திருக்கும் விடயங்களை விட
அதிகமானவற்றை நாம் மறந்து விடுகின்றோம்.
சிரிக்கத் தெரியாதவனும்,
சிந்திக்கத் தெரியாதவனும்
வாழ்வில் சிறப்புப் பெறுவதே இல்லை.
கனிவான முகத்துடன் கொடுக்கப்படும் பரிசு
என்பது இரட்டிப்பு அன்பளிப்புக்கு சமமானது.
நீங்கள் இருக்கும்போது உங்களை கண்டு
அஞ்சுபவன் நீங்கள் இல்லாதபோது உங்களை வெறுப்பன்
No Comment! Be the first one.