ஒருநாள் பொழுது.
பொன்னிறப் பொலிவில் பூத்திடும் வானம்
பூவமர்த் தென்றல் பொழிந்திடும் கானம்
தன்னிறம் மாறி தான் மறைந்தோடும்
தங்கி யிருந்த தலைநாள் இருளும்!
கண்ணிறை காட்சிகள் கலையெழில் கூட்ட
கதிரவன் வருவான் காலையை வாழ்த்த
அன்னிறைத் தொழி லொலி ஆரம்பமாகும்
அவரவர் பணிக்கு அவரவர் நடப்பர்!
ஒருநாள் தொடக்கம் உலவிடும் பூமி
ஒவ்வொரு நாளும் இதுதான் சாமி
பெருநாள் பேறு பெறுகிற இன்பம்
பெறுகிறப் பொழுதில் பிரியும் துன்பம்!
இயல்பில் இயற்கை இசையும் நமக்காய்
இலக்கை நோக்கி எழுநட கிழக்காய்
வயலும் வாழ்வும் வாய்த்தது தமக்காய்
வாழ்வதன் பொருளை வாழ்வதில் பதிப்பாய்!
No Comment! Be the first one.