அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்…
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்..
இது தான் அனுபவ பாடம்
உழைப்பை தேடி ஓடு… உதவியை தேடி ஓடாதே.
விண்ணை தொடும் போதோ, எனது “மதி” என்கிறான்…
மண்ணில் விழும் போதோ, எனது “விதி” என்கிறான்.
“தேவை” என்பது பலவீனமானவரையும் பலசாலியாக்கி விடும்.
வாய்மை வாசலிலேயே தடுக்கப்பட்டு நின்று விடும்…
பொய்மை இடுக்கு வழியாகக் கூட உள்ளே நுழைந்து விடும்.
சவால்களுக்காக சந்தோஷப்படுங்கள்….
அவை தான்…
உங்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிப்படுத்துகிறது.
படிப்படியாய் மேல்நோக்கி செல்வதே வாழ்க்கை.
இன்பம் மேலே மட்டுமல்ல, ஒவ்வொரு படியிலும் கூட இருக்கிறது.
நினைப்பதெல்லாம் நடந்து விடாது….
ஆனால் நினைக்காமல் எதுவுமே நடக்காது.
எதிலும் பரபரப்பு தேவையில்லை..
ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை
No Comment! Be the first one.