தேடிநீ திரிய வேண்டாம்
திசைதோறும் அலைய வேண்டாம்
கோடியில் செலவு செய்து
கொள்ளவும் எண்ண வேண்டாம்!
ஆடியும் பாட வேண்டாம்
அங்கமும் வருத்த வேண்டாம்
கூடிநீ கோஷ மிட்டு
கூத்துமே நடத்த வேண்டாம்!
அன்னையை நினைத்தால் போதும்
அருகிலே வந்து நிற்பாள்
கண்ணையே நம்ப மாட்டாய்
காட்சியில் ஒன்றி நிற்பாள்!
இன்றல நேற்று வல்ல
என்றுமே மாதா என்றால்
முன்னிலே காட்சி தந்து
முதற் கரம் நீட்டுவாளே!
No Comment! Be the first one.