ஊனில் உணர்வில் ஒன்று கலந்து
உயிரை வளர்ப்பவள் மாதா
தேனின் சுவையும் தெளிவரு கலையும்
தேடிக் கொடுப்பவள் மாதா!
வானின் நிலையும் வகைவகை நிகழ்வும்
வகையும் படுத்துதல் மாதா
வாழ்வியல் தன்னில் வலியைக் குறைத்து
வலிமைத் தருபவள் மாதா!
தேடுவர் மனதில் கூடி யடைந்து
தேவையைக் கொடுப்பவள் மாதா
ஆடுவர் ஆட்டம் ஆடி முடிகையில்
அமைதியைத் தருபவள் மாதா!
நீடும் நிலத்தை நிச்சயப் படுத்தி
நீங்கா திருப்பவள் மாதா
ஓடும் காலநதியை ஒறுக்கி
ஒழுங்குப் படுத்துதல் மாதா!
ஆனையூரான்
No Comment! Be the first one.