உள்ளும் புறமும் உலகை ஆளும்
உன்னதம் நிறைந்தவள் மாதா
உள்ளார் கூட உள்ளும் நிலைக்கு
உறவைத் தருபவள் மாதா
இல்லார் ஏழை இவரின் தோழியாய்
இரங்கி வருபவள் மாதா
எல்லா நிலைக்கும் இன்பம் பயக்க
எழுந்தவள்தானே மாதா!
கல்லார் சொல்லும் கணக்குப் பிழையை
கணத்தில் மாற்றும் மாதா
வல்லார்க் கென்று வளையா தென்றும்
வானாய் நிலைத்தவள் மாதா!
பொல்லா உலகின் பொய்மை யொழிக்க
புதிய ஏற்பா டவளே
பல்லுயிர் பாட்டுக்கு பலனு மளிக்க
பலனின் பலனு மவளே!
ஆனையூரான்
No Comment! Be the first one.