அன்னையின் ஆலயம் அண்டியே வருவோர்க்கு
அடுத்தொரு கவலையில்லை
கண்கொண்டு அவளையும் கைகொண்டு தொழுவோர்க்கு
காலமும் தொல்லை யில்லை!
தான்கொண்ட பாவங்கள் தலைபாரம் போலவே
தாயவள் இறக்கி வைப்பாள்
வான்கொண்ட கருணையை தாய்கொண்டு நிற்கிறாள்
வலிதனை நீக்கி வைப்பாள்
கேட்போர்க்கு கேட்டதை கிடைத்திட செய்பவள்
கீழ்மேல் பார்ப்ப தில்லை
ஆட்படும் அனைவரும் அடையவே யாவுமே
அணுவதும் மறப்ப தில்லை!
நம்பி வருவோர்க்கு நலந்தனை படைத்திடும்
நாயகி தேவ மாதா
செம்புல நீர்போல சேர்கிறாள் மானிடம்
செயலுற புவியி னுள்ளே!
No Comment! Be the first one.