நுண்ணுயிரும் நுகரத்தன் வாழ்வினை
மண்ணுயிரின் மடிவாழும் மாதா
கண்முன்னே காத்தருளும் கோலம்
என்னவென எடுத்தியம் லாகும்!
இரப்பார் கை நிரம்ப
இல்லையெணா மனம் அரும்ப
பிறப்பார் பிறவிப் பயன்
பெருமையுற படைப் பளித்தாள்
வந்த நோய் தீர்த்தாள்
வாராது நோய ழித்தாள்
எந்த துயர் எனினும்
எதிர் கொண்டு தானெதிர்த்தாள்
இந்த மண் வாழ்வில்
இரண்டற வாழ் விருந்தும்
அந்த விதி மாறா
அதனிலும் சுக மளந்தாள்!
இம்மைப் பிறப் புயர்வை
இனிதாக்கி காக்கத் தான்
அம்மை கோலத்தில் அமர்ந்தாளே
அழகுத் தமிழ் பூமியவள்!
ஆனையூரான்
No Comment! Be the first one.