இயற்கை யருளால் இப்புவி யமைப்பு
இயம்பிட பலவும் உண்டு
செயற்கை முறையில் சீர்பட உலகை
செய்திட யாரு முண்டு?
வியக்கும் வண்ணம் விதவித மாற்றம்
விளைவுகள் பலவும் உண்டு
வியனு லகிதனில் வியப்பே மனிதம்
வியந்திட விதியும் உண்டு!
இன்பம் துன்பம் இரவுப் பகல்
எதிரெதிர் துருவ முண்டு
ஒன்றெனில் ஒன்றில் ஒன்றா பெருமை
ஒன்றிய ததனால் இரண்டு!
ஆனப் புவியை அன்புடன் காக்க
அவனியில் யாரு முண்டு
தானென உள்ளார் தாயாம் மரியாள்
தரணியில் கண் கொண்டு!
ஆனையூரான்
No Comment! Be the first one.