அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பும் + தயாராவதும் சந்திக்கும் இடமாகும்
ஒவ்வொரு புதிய தொடக்கமும் வேறு ஏதேனும்
தொடக்கத்தின் முடிவிலிருந்து வருகிறது.
எதிர்கால இன்பங்களை காயப்படுத்தாத
வகையில் தற்போதைய இன்பங்களை அனுபவியுங்கள்.
நாம் தைரியமாக இருக்காதது
விடயங்கள் கடினமானவை என்பதால் அல்ல.
அவை கடினமானவையாக இருப்பதற்கு
காரணம் நாம் தைரியம் காட்டாததால் தான்.
உராய்வு இல்லாமல் ஒரு ரத்தினத்தை மெருகூட்ட முடியாது,
சோதனைகள் இல்லாமல் ஒரு மனிதனை முழுமையாக்க முடியாது.
நிஜத்தை விட கற்பனையால்
நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.
சில நேரங்களில் வாழ்வது கூட தைரியமான செயல்.
யாரிடம் குறைவாக இருக்கிறதோ அவர் அல்ல ஏழை ;
யார் அதிகமாக ஏங்குகிறாரோ அவர் தான் ஏழை.
ஒரு மனிதன் எந்த துறைமுகத்திற்கு பயணிக்கிறான்
என்று தெரியவில்லை என்றால், எந்த காற்றும் சாதகமாக இருக்காது.
No Comment! Be the first one.