தேடி வருவார் தேடத் தெரியார்
நாடி வருவார் நாடத் தெரியார்
வாடி இருப்பார் முகங் கண்டே
வாட்டம் நீக்குவள் அன்னை மரியாள்!
பேதமிலா தொரு பேரின்பக் கடலாம்
பெரியதோர் மனத்துள் பெருகும் சமத்துவ
காதலால் கனிந்தே கன்னி மரியாள்
கையளிக் கின்றாள் கருணை வடிவாள்!
அன்னை மரியாள் அரும்பே ருலகில்
எண்ண கிடைக்கும் எதுவும் பொய்யிலை
மண்ணோர் மனதை மதிகொளும் மாதா
மகிழ்வா யளித்தல் மாச் சிறப்பன்றோ!
தாயுளம் கருணை தயவு நிறைந்தொரு
சேயை யணைக்கும் செய்வினை அதனை
ஆய மகத்துவ அருள்தரும் மரியாள்
அகிலம் புலர்த்துதல் அதிசய மில்லை!
No Comment! Be the first one.