பாவத்தை சுமப்பவர்!
ஐவகை நிலம் பிரித்தார்
அழகெலாம் அதில் விரித்தார்
மெய்வகை சேரும் வண்ணம்
மெத்தவே புவிபடைத்தார்
நல்லது கெட்ட தென்று
நமக்கது உணரும் வண்ணம்
கொள்ளவும் வழி வகுத்தார்
கொடுப்பது ஒன்றே செய்தார்!
அல்லாத பாவம் செய்தாரின்
அத்தனை சுமையும் ஏற்றார்
நில்லாது பூமி தன்னை
நித்தமும் சுழலச் செய்தார்!
உள்ளாடும் உயிரைக் காக்க
உடல்தனில் சிலுவை ஏற்றார்
பல்லுயிர் பாரில் வாழ
பாவத்தை சுமந்தார் ஏசு!
No Comment! Be the first one.