மரியாள் தாள்பணி!
கருணைமழை பொழிவாள்
கன்னி மரியாளை
உருக உள்ளத்தில்
உள்ளேற்றி வைக்குங்கால்
பெருகா துன்பமெதும்
பிறிதகலும் துயரதுமே
நிறையும் நீள்சுகம்
நித்திய பொழுதுதனில்!
அவளை சரணடைந்தோர்
ஆவதிலை சுகக்கேடு
எவையும் அவளருளை
எடுத் தருள வழியுமிலை
மகவைதாய் காப்பதுபோல்
மானிடத்து உயிர்களை
மரியாள் காக்கின்றாள்
மாதாவின் தாள்பணிவோம்!
இறைக்கும் இறையானவளை
இறைஞ்சுகின்ற எவ்வுயிர்க்கும்
மறைக்காத் தன்னுருவை
மண்ணிடையே காட்டுகின்ற
மரியாள் மகத்துவத்தை
மனதறிவோர் மாய்வதிலை
அறிவாய் அன்னையவள்
அரிதார்ந்த தத்துவத்தை!