ஆனையூரானுக்கு அகவைத் திருநாள்!
சொல்லழகு சுவையழகுச் சொட்டச் சொட்ட
பல்லழகு கவிதைதனை படைக்கும் தோழன்
கல்லழகுக் கூட்டுகின்ற கலையைப் போலே
கவியிவனும் செம்மொழிக்கு கடமை வீரன்!
ஆனையூரான் அன்னை யவள் கருணையாலே
அவனியிலே பிறந்திட்ட அழகு நாளாம்
நாநனைய நன்னாளில் நானும் வாழ்த்தி
நன்றிமலர் குவிக்கின்றேன் கவியே வாழ்க!
நூறாண்டு நுகர்ந்தினியும் நுழைந்து வாழ்வில்
பேராண்டு பெரும்புகழ் பெருமை யாண்டு
சீராண்டு சிறப்புற செல்வம் ஆண்டு
செந்தமிழ்போல் நீவாழ்க செகத்தி லென்றும்!
பொன்மணிதாசன்
No Comment! Be the first one.