கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல.
அதிகம் அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.
அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை
ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை!
குடிக்காமலும் சிகரெட் பிடிக்காமலும்
இருந்து ஒரு பிறந்தநாளை அதிகப்படுத்துங்கள்!
உலகம் அழியாது நம்புங்க… அப்படி அழிஞ்சா
என்னைக் கேள்வி கேட்க நீங்க உயிரோட இருக்கவா போறீங்க?
எழுதிய புத்தகங்களைவிட எழுதாத வெற்று பக்கங்களே மதிப்புமிக்கவை – அதில்
என்ன வேண்டுமானாலும் எழுதப்படலாம்!
உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள்.
பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல.
மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள்.
வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே! “ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
கடினமான செயலின் சரியான பெயர் சாதனை.
சாதனையின் தவறான விளக்கம் கடினம்.
துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும்
எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை விட துயரமானவை.
எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
விவாதம் செய்வது நிழல்களுடன் போராடுவதற்கு சமம்.
No Comment! Be the first one.