கோபம் அடைமழையாக
கொட்டித் தீர்த்தாலும்
அன்பு அது ஒரு ஓரம்
நின்று குடை பிடிக்கும்
அழகு என்பது
வயது உள்ள வரை
அன்பு என்பது
உயிர் உள்ளவரை
கண்கள் தான் இருந்தும்
பார்க்க முடியாமல்
தானே இருக்க முடிகிறது
அன்புக்கு நிகரான
உண்மை முகங்களை
கோபத்தில்
ஏழையாக இரு
அன்பில்
பணக்ககாரனாக இரு
வாழ்க்கை சிறக்கும்
ஆயிரம் புரிதல்கள்
இருந்தாலும்
சில சறுக்கல்களும்
வந்து போகிறது
நம் அளவு கடந்த
அன்பிற்கு சவாலாக
வார்த்தைகள் வெளிப்படுத்தாத
அன்பையும்
புன்னகை வெளிப்படுத்தி
விடுகிறது
அன்பால்
அழகு செய்
எவர் தடுத்தாலும்
மறையாது பேரன்பு
மனதால் எவ்வளவு
பலமானவர்களையும்
அழ வைக்கும் ஒரே
ஆயுதம் உண்மையான
அன்பு மட்டுமே
இன்பம் மட்டும் கூட்டி
இதய இராகம் மீட்டி
எந்த நிலையின் போதும்
மாறா அன்பை
மட்டும் ஊட்டி
காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்
நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு
கிடைக்கும் என்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா
என்பதில்
தான் பிரச்சனை
அன்பு
No Comment! Be the first one.