இருக்க வேண்டும் இனியதொரு கிழக்காய்
இறப்பதற்காய் இருக்க வேண்டாம் பிறப்பாய்
சிரிக்க வேண்டும் செம்மலரின் விரிப்பாய்
சிறிதுமழ கற்க வேண்டும் உரப்பாய்!
துன்பம் வரும் துயரம்வரும் எதிர்ப்பாய்
துரத்தி வரும் தொல்லைகளை அழிப்பாய்
அன்பு வரும் பண்புவரும் மதிப்பாய்
அருகில் வரும் ஆணவத்தை மிதிப்பாய்!
தலை குனிதல் தவறுயென வெறுப்பாய்
தலை நிமிர்ந்து தரணிதனில் நடப்பாய்
கலை மிளிர கண்ணதனில் பதிப்பாய்
கற்றுவக்க கற்று வக்க சிறப்பாய்!
No Comment! Be the first one.