அடைக்கல அன்னை கொடியேற்றம்
ஆனையூர் எங்கும் கொண்டாட்டம்
தடைக் கல்லான எது வெதினும்
தகர்த் தெறிவாளிங்கு வாருங்கள்!
அருட்பசி போக்கும் அன்னையினை
ஆனையூர் வந்து கண்டிடுங்கள்
இருட்பசி என்பது இருக்காது
இல்லத்து மகிழ்வு குறையாது!
பிறவிப் பயனுற வேண்டுமெனில்
பிணிகள் அகற்ற வேண்டுமெனில்
வருவீர் அடைக்கல அன்னையிடம்
வருவார் கருள்வாள் நல்லயிடம்!
மண்டியிடு அவள் முன்னிலையில்
மாதா அருள்வாள் பன்னிலையில்
கண்டுவிடு அப் பேரொளியை
காண விழைப் பேராலயத்தை!
ஆனையூரான்
No Comment! Be the first one.