நிம்மதி தேடி நித்தம் அலைபவர்
நெஞ்சில் துயரொரு பாரம்
தம்மதி சீரால் தாமே தேடலாம்
தனக்கும் கிடைக்கு மவ்வோரம்!
வானத்தை நோக்கியே வலிந்து நடந்தால்
வழுக்கு மிடரும் கால்கள்
தானதை யுணர்ந்து தாழேப் பார்த்தால்
தடுமாற்றம் ஏது நடையில்!
உயரம் சரியும் உற்றுப்பாரு உனக்குமெளிது புரியும்
உயரம் கூட உயரம் கூட
உன்னில் வலியும் விரியும்!
இயல்பாய் இருந்தால் இனிக்கும் பயணம்
இல்லைத் துயரம் ஏதும்
அயலைப் பார்த்து அலைய அலைய
அடைவாய் எந்த தீதும்!