நானும் தமிழுக்கு அடையாளம்
நற்றமிழ் போற்றியதென் காலம்
ஈனும் என்கவி வரலாறு
ஈன்ற வனெனக்கே பெரும்பேறு!
கவிஞன் என்றொரு இறுமாப்பு
கவித்துவம் யாவும் தமிழ்யாப்பு
புவிதனை மறந்தே புகழ்சேர்ப்பு
புறத்தே இல்லை எனதீர்ப்பு!
காலத்தைச் சேமிக்கக் கற்றவன்நான்
காவிய நாட்டின் கொற்றவன்நான்
நாளும் நடைபெறும் யாத்திரையை
நம்பிக்கை கண்ணால் உற்றவன்நான்!
வெற்றிக் கென்று முயல்வதிலை
விருதுக் கென்று அலைவதிலை
முற்றும் தமிழொடு வாழ்வதனால்
மூன்றாய் ஒன்றை நினைப்பதிலை!
No Comment! Be the first one.