சொல்ல வியலா சுமக்கும் சுமையே–கவலை
உள்ள சுமையில் ஊடும் நிலையே!
நல்லோ ருள்ளும் நாடும் களையே –அதை
நசித்து எரிவது நம்மின் கலையே!
ஆசை வளர்க்கும் அறிவைத் தடுக்கும்–நித்தம்
பேச்சை முடக்கும் பெருஞ் சோர்வளிக்கும்!
ஈசனைக் கூட இடிந்திடச் செய்தது–உள்ள
ஏழைக் கென்றே இன்றும் இருப்பது!
கவலை யில்லா மாந்தரு மில்லை-அந்தக்
கவலைத் தானே காண்துயர் தொல்லை!
No Comment! Be the first one.