துளியில் தொடங்கிடும் கவிதை
தூக்கத்தை கலைக்கும் பொழுதை!
வலியில் தொடங்கி பின்பு
வலிக்கும் அதுவே மருந்து!
கலையில் சிறந்து துளிர்க்கும்
கண்ணீரில் மிதந்து சிலிர்க்கும்
ஒலியில் அசையை உயிர்க்கும்
உணர்வின் உயிரை எழுப்பும்!
இரவும் பகலும் ஒன்று
இதுதான் கவிதைக் கென்று
பிறவும் தமிழின் சிறப்பை
பிரித்தே காட்டும் உயர்வை!
கவிதை உலகம் தனியே
கவிஞனுக் கினியக் கனியே
கவிதை யலாத உலகை
காண்பதுகூடப் பிணியே!
எழுதொரு கவிதை புதிதாய்
எழும்பட்டும் புதிய புவியாய்
பழுதற விளங்க மண்ணில்
படைப்புத் துலங்கட்டு முன்னில்!
கவிதைப் போருக்கு வாளே
கவிதைத் தமிழுக்கு சீரே
கவிதை வானுக்கு நிலவே
கவிஞனின் கற்பனை கவியே!
No Comment! Be the first one.