ஒற்றுமைக் குலைக்கும் ஓநாய்க் கூட்டம்
ஒன்றி சேருது நாட்டிலே
இற்று இளைக்கும் ஏழைக் கிங்கு
இல்லை காப்பு வீட்டிலே!
பற்றும் பணத்தின் பங்கு கணக்கு
பலகோடி என்ற கணக்கிலே
பதுக்கி ஒளித்த பணத்தில் பாவம்
பதுங்கி யிருக்கு கணக்கிலே!
வாழத் தேவை வைப்பு நிதியிலை
வாய்த்தால் தொழிலே போதும்
ஏழ்மை நீங்க இலட்சியம் கொண்டால்
இல்லை எந்தத் தீதும்!
ஆழ்ந்து புரிந்து அரசு நடந்தால்
அத்தனை வளமும் சிறக்கும்
தாழ்வென ஒன்று தரணியில் இன்றி
தண்ணிலம் மெங்கும் செழிக்கும்