ஓய்வெடு என்றால் கோபம்வரும்
ஓய்வின்றி எழுதவே ஆசைவரும்
தாய்மொழி மோகம் மேவிவரும்
தமிழ் போற்றாதெப்படி மூச்சுவரும்!
எழுதுவதென் தவம் எழுதுகிறேன்
எழுதிய தனைத்தும் துழவுகிறேன்
எழுத்தால் உலகில் நிலவுகிறேன்
எழுத்தால் பலரைக் கவருகிறேன்!
இரவுப் பகலெனும் பேதமில்லை
எழுத இடமோ தேர்வுயில்லை
உறவாய் மரத்தின் நிழலடியும்
ஒதுங்கும் இடமும் என்னிருக்கை!
இறுதி வரையிலும் எழுதுவதே
என்னாசையின் இலக்கு தப்பாது
இருக்கும் எனக்குப் பிற்காலும்
என்எழுத்துக்கு வேறினி ஒப்பேது?
No Comment! Be the first one.