பிறப்பும் இறப்பும்
நமக்குள் ஒவ்வொரு
நொடியிலும் நிகழ்கிறது. …!!!
நோயின் கொடுமையிலும்
வாழ்க்கை தோல்வியிலும்
ஆசையின் தொடர்ச்சிலும்
உணவின்றி குப்பைகளில்
சேர்க்கின்றதே மரணம் ……!!!
இதில் என்ன கொடுமை….???
நல்லவனுக்கு ”சொர்க்கமாம் ”
கெட்டவனுக்கு ”நரகமாம் ”
விதையில் ஆரம்பித்து
மீண்டும் ஒரு கனிக்குள்
முடிவதுதானே
வாழ்க்கை தத்துவம்…..!!!
வாழ்வது ஒரு முறைதான்
வாழ்நாள் முழுதும்
வாழ்வோம் தலை முறை
போற்றும் படியாக ……!!!
பூமியைவிட மிகபெரிய நரகம்வேறெங்கும்
இருக்க வாய்ப்பில்லை…….!!!
நிரந்தர மரணத்தைவிட ஆகபெரிய
சொர்க்கம் வேறெதுவும் இல்லை…….!!!
மரணத்தை “பிறவிக்கடனுடன்
“கடந்து செல்லுங்கள் சொர்கத்திற்கு ……!!!
தவறவிட்டிர்கள்”…பின் மீண்டும்
பிறக்க நேரிடும் நரகத்தில் …….!!!
மரணம் என்பது என்றோ
எப்போதோ நிகழ்வதில்லை……!!!
தலை முடி உதிர்வது மரணம்……!!!
விரல்நேகம் வெட்டப்படுவது மரணம்……!!!
பல் விழுவது மரணம்……!!!
கண்பார்வைகுறைவு மரணம்……!!!
தீர ஞாபக மறதி மரணம் …….!!!
இப்படி ஒவ்வொரு கணமும் மரணம்
நமக்குள்நடந்து கொண்டு தான் இருக்கிறது……!!!
ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாதால்
தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து
மரணம் சொல்லைக் கேட்டாலே அபசகுனம்,
அதைப்பற்றி பேசுவதோ தவறு
என்று கற்பனை வலையில் காலம்
கடத்திக்கொண்டு இருக்கிறோம்…….!!!
மரணத்திற்கும் முன்
“நீ” மரணித்து விடு புண்ணியத்தாள்……!!!
இஸ்லாமில் “உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்…….!!!
No Comment! Be the first one.