இழந்த பின்னும் வாழ வேண்டுமா
முயற்சிகளை கைவிடாதே …!
இறந்த பின்னும் வாழ வேண்டுமா
சாதனைகளை செய்ய அஞ்சாதே …!
நேர்மையாக இங்கு வாழ்ந்தால்
அஞ்சுபவன் என்றுதான் இந்த முட்டாள் உலகம் சொல்லும்.
உண்மையாக இருந்தால் ஏமாற்றத்தான் இந்த உலகம் பார்க்கும்.
நிலையான குணம், தூய்மையான அன்பு,
மகிழ்ச்சிகரமான மனம் எவனிடம் உள்ளதோ
அவனே இங்கு கொடுத்து வைத்தவன்.
உன் சிந்தையால் எந்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.
நீ நிதானமாய் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண இயலும்.
ஆசைகள் ஒன்றே மனிதனின்
குணத்தை மாற்றும் வல்லமை பெற்றது.
அதை அடக்கும் மனவலிமை உள்ளவனே நிஜமான
பலசாலி ஞானயோகி…!
வாழ்க்கை என்னும் பரீட்சையில் ஜெயித்தவன் ஆகிறான்.
கனவுகளில் வாழ்க்கையை தேடலாம்.
ஆனால் தேடல்கள் என்றுமே கனவுகளாக மாறி விடக்கூடாது.
நிஜங்களில் கற்பனை பொய்கள் வேரூன்றக்கூடாது…!
தினமும் பந்தயம் இந்த பகலுக்கும் இரவுக்கும்.
இறுதியில் வெல்வது இந்த இரண்டும் தானே…!
அது போலவே இங்கு மனிதர்கள் உண்டு.
யாரும் வென்று கொண்டே இருக்கப் போவது இல்லை .
வாழ்க்கையின் புதிருக்கு விடை
உன்னை இயற்கை இந்த உலகில் படைத்தது
எதற்காக என அறிவதில் தான் அடங்கியிருக்கிறது.
No Comment! Be the first one.